Monday, August 31, 2009

பிள்ளையார் அரசியல் - மலையருவி

பிள்ளையார் அரசியல்

மலையருவி

விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு போயி
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு

ஆனா!
நீதான் கொஞ்சம் ஒத்துழைக்கணும்

பக்தர்களாகிய
நம் தொண்டர்கள்
உற்சாகத்தில்
எல்லைமீறிப் போனாலும்
நீதான் கணேசா
கண்டுக்காம இருக்கணும்

வழியெல்லாம்
உன் அருமை பெருமைகளை
ஆடிப் பாடி
ஆர்ப்பாட்டம் செய்தாலும்
ஊரைக் கலக்கினாலும்
உனக்காகத் தானே கணபதி
ஒத்துக்கிட்டு பேசாம வா!

விஸ்வரூப தரிசன
விநாயகப் பெருமானே
கடலில் உனைக் கரைக்க
கஷ்டப்படும்
தொண்டனுக்குக்
கொஞ்சம் நீ ஒத்துழைச்சா
கட்சிக்கு நல்லது

கிரேனால தூக்கும் போதே
உன் கைகால்கள்
சிதைஞ்சிட்டா
பிள்ளையாரே
சிரமம் உனக்குமில்ல
சின்னவன் எனக்குமில்ல

உடைஞ்சி போகாம
அய்ந்து கரத்தானே!
நீ அழிச்சாட்டியம்
பண்ணாக்கா
கத்தியால உன்ன
கால் வேற கை வெறா
வெட்டறத தவிர வேற வழியில்ல

வெட்டுப்பட்ட பெறகும்
விக்னேஸ்வரா!
நீ கடலில் மூழ்கிக்
கரைஞ்சி போகலன்னா
ஏறி மிதிச்சித்தான்
ஏதனாச்சும் செய்யனும்

விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு வந்து
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு

3 comments:

சி.கருணாகரசு said...

கவிதை அருமைங்க முனைவரே. பாவம் பிள்ளையார், பக்தி என்ற பெயரில் படாதபாடு படுறார்.

முனைவர் நா.இளங்கோ said...

நன்றி! தோழர் கருணாகரசு பக்தி அரசியலாக்கப் பட்டதே என்ற வேதனையில்

Anonymous said...

நானும் விநாயகர் சதுர்த்தி கூத்துகள் குறித்து எழுத நினைத்தேன்.பிள்ளையார் படும் பாடு பெரும்பாடு.பதிவுக்கு நன்றி
மு.பா