-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)
நுரை
ததும்ப
நக
அழுக்குகளைக் கீறி
உள்ளங்கைகளைத்
தேய்த்துக்
குழைத்து
விரல்கள்
நீவி
புறங்கை
சுரண்டிக்
கழுவி
கழுவி
கழுவி
கழுவிக்
கைகள்
சிறுத்தன
கைகழுவிச்
சோறுண்ணும்
பழக்கத்தில்
கைகழுவும்
போதெல்லும்
இரைப்பை
இரையை
எதிர்நோக்கிக்
குதூகலிக்கும்
அநிச்சைய்யாய்ச்
சுரக்கும்
உமிழ்நீரில்
நாக்கு
புரண்டு
புரண்டு படுக்கும்
ஈரமானது
கைகள்
மட்டுமல்ல
கண்களும்தான்
ஈரமில்லா
தேசத்தில்
எல்லோரும்
கைகழுவி
விட்டார்கள்.