-முனைவர் நா.இளங்கோ
குவித்து
மூடிய
கைகளுக்கு
இடையே
சிக்கிய
மேகத்தை
எப்படிப்
பார்ப்பது?
இலேசாகக்
கைகளைப்
பிரிக்கவும்
அச்சம்.
இடைவெளியில்
மேகம்
நழுவிவிடக் கூடும்
விரல்
இடுக்குகளில்
மேகம்
கசிந்து விடாதிருக்க
இறுகப்
பற்றிய
விரல்கள்
நடுங்கின
கைகளுக்குள்ளே
கருவரைச்
சிசுவாய்
மடங்கிச்
சுருண்டிருக்கும்
மேகத்தைப்
பார்க்க
மனசு
துடித்தது
விரல்களை
விலக்கினால்..
கைகளைப்
பிரித்தால்..
உள்ளங்
கைக்குள்
சிறைபட்டிருக்கும்
மேகப்பறவை
விருட்டென்று
சிறகடித்து
விரைந்து
பறக்கலாம்
நடுங்கிய
விரல்கள்
நாழிகை
கடக்கையில்
கொஞ்சம்
கொஞ்சமாய்
மரக்கத்
தொடங்கின
கைச்சிறைக்குள்
சிக்கிய
மேகத்தை
என்ன
செய்வது?
ஒருமுறை
ஒரே ஒருமுறையாவது
கண்ணாரக்
காணாமல்
கைப்
பிடிக்குள்
கட்டுண்ட
மேகத்தைக்
கனவில்
கண்டா
களிப்புறுவது.
காலம்
கடக்க
காலம்
கடக்க
மேகம்
மறந்தது
கைகள்
கனத்தன
கனத்த
விரல்களை
மெல்லத்
திறந்தேன்
ஆகாயத்தில்
மேகத்திரட்சி
உள்ளங்கையில்..?