-மலையருவி
நடக்கிறோம்
நானும்
என் குடும்பமும்..
நடக்கிறோம்
நானும்
சக தோழர்களும்..
தேசத்தின்
குறுக்கும்
நெடுக்குமாக
தெற்கிலிருந்து
வடக்காக
மேற்கிலிருந்து
கிழக்காக
தேசம்
எவ்வளவு பெரிது
தலைச்சுமையால்
கழுத்து
நெரிய
மூட்டை
முடிச்சுகளால்
முதுகு
நெளிய
நடக்கிறோம்.. நடக்கிறோம்
வலசை
போன
பறவைகளாய்த்
தாய்
மண் தேடி..
பஞ்சம்
பழைக்கப் போய்
பாதிவழி
மீள்கிறோம்
பீச்சியடிக்கும்
கிருமி
நாசினிக்
குழாய்களில்
குளித்து
லத்தி
யடிகளில்
உடல்
திமிறி
எல்லையற்று
நீளும்
தார்ச்சாலைகளில்
தடம்
தேய
நடக்கிறோம்..
நடக்கிறோம்..
சாலை
விபத்துகளில்
ரயில்
தண்டவாளங்களில்
பசி
மயக்கத்தில்
செத்து
வீழ்ந்தவர்களைச்
சுமக்க
முடியாத
நடைப்
பிணங்களாய்..
கொளுத்தும்
கோடை
வெயில் குளித்து
வீசும்
புழுதி
மண்
பூசி
தாகம்
தணிக்க
நீரின்றி
வயிற்றுப்
பசிக்குச்
சோறின்றி
நடக்கிறோம்..
நடக்கிறோம்..
தேசமெங்கும்
தார்ச்
சாலைகள்
எங்கள்
ஊரிலும்
இதே
தார்ச் சாலை
நடப்போம்
நடப்போம்
கால்நடையாய்..
நடந்து
நடந்துக்
கால்கள்
தேய்ந்தாலும்
சுமந்துச்
சிவந்த
கைவிரல்களுக்குச்
சேதமில்லை..
தேர்தலன்று
மை
வைக்க
விரல்
வேண்டுமே!