தேசிய முகமூடி
மலையருவி
பழைய முகமூடி
நைந்து போனதால்
தேவை
இப்போதைக்குப்
புதிய முகமூடி
அவசரத் தேவைக்கு
அணிந்து தொலைத்த
தனிநாடு முகமூடி
தரமற்று இருந்ததால்
தார் தாராகக்
கிழித்து எறிந்தோம்
அன்றைய தேவைக்குச்
சுயாட்சி முகமூடி
சுகமாயிருந்ததால்
அணிந்து சுகித்தோம்
ஊழல் சுயநல
வெய்யில் மழையில்
காய்ந்தும் நனைந்தும்
பழைய முகமூடி
நைந்து கிழிந்தது
முகத்தோடு
ஒருபாதி ஒட்டிக்கொண்டும்
மறுபாதி வெளுத்துக்
கிழிந்து தொங்கியும்
பழைய முகமூடி
பயனற்றுப் போனது
தேவை
இப்போதைக்கு
ஒரு புதிய முகமூடி
பரவாயில்லை!
முகத்துக்குப் பொருந்தவில்லை
என்றாலும்
தேசிய முகமூடியே
இருக்கட்டும்
சமாளித்துக் கொள்ளலாம்.
4 comments:
ஆம் எப்படியோ எங்கள் ஆட்சி நிலைத்தால் போதும்
சாட்டையடி கவிதை. புரியுமா !?!
நல்லாயிருக்கு அருமை
முகமூடி கிழியும் வரை வெளுத்து வாங்குங்க முனைவரே.
கவிதை மிக அருமை.
திராவிடத்தின் பொய் முகங்களைத்
தோலுரித்துறள்ளீர்கள்.நல்ல பதிவு
Post a Comment