சிரிக்கப் பழகுங்கள்
மலையருவி
பகல் இரவு
இரண்டு நேரங்களில் மட்டும்
மின்சாரம் தடைபடலாம்
வந்து வந்தும் போகலாம்
வராமலும் போகலாம்
மின்சார வாழ்க்கை
செயற்கையானது
இயற்கையை நோக்கித் திரும்புவோம்
சிறுதொழில்கள்
மின்சாரமின்றி நலிவடைகின்றதா?
உலக முதலாளிகளும்
பன்னாட்டு நிறுவனங்களும்
இருக்கும்போது
நம்மூர்த் தொழில்கள் எதற்கு?
சாதாரண குடிமக்கள்
மின்சாரமின்றி பழகிக்கொள்வது நல்லது
அது
நம் மூதாதையர்களுக்கு
நாம்காட்டும் மரியாதை
வாகனங்கள் வைத்திருக்கின்றீர்களா?
நடப்பது நல்லது
காலை மாலை மட்டுமல்ல
எப்பொழுதுமே நடப்பது நல்லது
வாகனங்களைத் தள்ளிக்கொண்டே
நடந்து பழகினால்
நானூறு ஆண்டுகள்
நலமாக வாழலாம்
பெட்ரோல் பங்குகளில்
வாகனங்களின் துணையோடு
முண்டியடித்து
வரிசையென்ற ஒன்றில்லாத
வரிசைகளில் நிற்கப் பழகிக்கொண்டால்
வருங்காலம் பிரகாசமாகும்
சிரிக்கப் பழகுங்கள்
அட சும்மா!
சிரிச்சித்தான் பழகுங்களேன்.
2 comments:
சிரிக்கப் பழகுங்கள்
அட சும்மா!
சிரிச்சித்தான் பழகுங்களேன்.
கரிச்சுக் கொட்டும் வாழ்வெதற்கு?
கையில் நாலு காசு சேரட்டும்
அப்பொது தெரியும்
மின்தடையின் மகிமை!
மலையருவி இப்போதெல்லாம் இடுகைகள் இசுவதில்லையா. கவிதைகள் நன்றாக இருக்கு இதைப் படித்தால் ஒரு இடுகை போடுங்கள்.காத்திருக்கிறேன்.
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com
Post a Comment