நேற்று இன்று நாளை
நேற்றைய பொழுது
எப்போது முடிந்தது?
இன்றைய தொடக்கம்
எந்தக் கணத்தில்?
நாளைய தினத்தின்
வரவு அறிவேனோ?
இரவில் தூங்கிப்
பகலில் விழிக்கும்
உறக்கம் தொலைந்த
பொழுதுகளில்
உள்ளும் வெளியுமாய்
எல்லை வகுக்கும்
இருப்பிட இயக்கம்
துறந்த
தருணங்களில்
விளிம்புகள் அற்ற
வெளிகளில் சுற்றிய
முடிவறியாத
காலங்களில்
நேற்றைய பொழுது
எப்போது முடிந்தது?
இன்றைய தொடக்கம்
எந்தக் கணத்தில்?
நாளைய தினத்தின்
வரவு அறிவேனோ?
No comments:
Post a Comment